சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மார்ச் மாதத்தில் குளிர்சாதன புறநகர் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடற்கரை – தாம்பரம் இடையே பயணிக்க ரூ.95 கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குளிர்சாதன புறநகர் தொடர் ரெயில்களுக்கான பெட்டிகள் தென்னக ரெயில்வேயிடம் ஐ.சி.எப் வழங்கவுள்ளது.
மதுரை – போடிநாயக்கனூர் ரயிலின் நேரம் மாற்றியமைப்பு
பிப்ரவரி 10ம் தேதி முதல் மதுரை – போடிநாயக்கனூர் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட உள்ளது. பிப்ரவரி 10ம் தேதி மதுரையில் இருந்து காலை 8.20க்கு புறப்பட்டு காலை 10.20க்கு போடிநாயக்கனூர் சென்றடையும். மறு திசையில், பிப்ரவரி 10ம் தேதி முதல் போடிநாயக்கனூரில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50க்கு மதுரை வந்து சேரும்.
கன்னியாகுமரி – புனலூர் கூடுதல் நிறுத்தம்
கன்னியாகுமரி – புனலூர் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் செய்யப்படுவதால் பரவூர் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்லும். ஒன்றிய அரசின் சிறுபான்மைகள் விவகாரங்கள், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறைக்கான இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் நிறுத்தத்தை தொடங்கி வைப்பார். புனலூர் – கன்னியாகுமரி பயணிகள் ரயில் எண் 56705/56706 ஆனது, சோதனை முறையில் பரவூர் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 2025 பிப்ரவரி 8 முதல் புறப்படும் சேவைகள் மற்றும் புனலூரில் இருந்து 2025 பிப்ரவரி 9 முதல் புறப்படும் சேவைகள் பரவூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மார்ச் மாதத்தில் குளிர்சாதன புறநகர் ரயில் இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.