
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில். நவதிருப்பதி கோவில்களில் 6-வது ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறு வருகிறது.
நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம், நித்தியல், 7.30 மணிக்கு உற்சவர் மாயக்கூத்தன் தாயார்களுடன் கருட மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் 8.00 மணிக்கு மாட வீதி, ரதவீதிகளில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்து தீபாராதனை, பின்னர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலையில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7.45 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் தாயார்களுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.