பெரியார் மீதான விமர்சனத்தை விஜய் எதிர்க்கவில்லையா? த.வெ.க. விளக்கம்

6 hours ago 2

சென்னை,

மதுரையில் கடந்த 22-ம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த பெரியார், அண்ணா மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் முன்னிலையிலேயே அவர்களது கொள்கை தலைவர்களான பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ வெளியிடப்பட்டது தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் தி.மு.க.வினர் மிகக் கடுமையாக அ.தி.மு.க.வை விமர்சனம் செய்தனர்.

அதே சமயம், பெரியாரை தங்கள் கட்சியின் கொள்கை தலைவர் என்று அறிவித்த த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், பெரியார் மீதான விமர்சனத்தை விஜய் எதிர்க்கவில்லை என்ற விமர்சனம் குறித்து த.வெ.க. தரப்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளட் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். த.வெ.க. கொள்கை பரப்பு செயலாளர் என்ற அடிப்படையில் மாநாடு நடைபெற்ற தினமே 2 பக்க அறிக்கையை வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார். இது தெரியாமல் சிலர் விமர்சனம் செய்து வருவதாகவும், தங்கள் கட்சி தலைவர் விஜய்யின் குரலாகத்தான் தாங்கள் பேசுவதாகவும், எழுதுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

Read Entire Article