சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள முத்தமிழறிஞர் தமிழ்வேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையம் சார்பில், திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்ற ஓராண்டு பகுதிநேர முதுநிலைப் பட்டயப் படிப்பு நடத்தப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜெகநாதன் அறிவித்துள்ளார். இப்படிப்பிற்கு, 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் பட்டய படிப்பிற்கு, இளநிலைத் தமிழிலக்கியம், இளநிலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுநிலைத் தமிழிலக்கியம், முதுநிலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் ஆகிய துறைகளில், ஏதேனும் ஒன்றை தற்போது பயின்று கொண்டிருக்க வேண்டும்.
பாடத்திட்டமாக, முதற்பருவத்தில் திராவிட இயக்க வரலாறு, திராவிட இலக்கியம், திராவிட இதழியல், உலக தத்துவ மரபில் திராவிடவியல், திராவிடவியலும் சமூக வளர்ச்சியும் ஆகியவையும் இரண்டாம் பருவத்தில் திராவிட இலக்கிய அழகியல், திராவிட இதழ்களின் நடையியல், திராவிட கலை ஊடகங்கள், திராவிடத் தத்துவவியல், திராவிடவியல் ஆய்வுகள் ஆகியவையும் பயிற்றுவிக்கப்படும்.
The post பெரியார் பல்கலையில் திராவிட இலக்கியம்,இதழியல் பட்டய படிப்பு அறிமுகம் appeared first on Dinakaran.