சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், ஓய்வு பெற்றவர்களில் ஒரு பிரிவினருக்கு பதிலாக இன்னொரு பிரிவினருக்கு வேலை வழங்கியது மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. நிதி மோசடிகள் நடைபெற்று இருப்பதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், பெரியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம், நூலகர் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, நேற்று முன்தினம் கணக்குகள் தொடர்பான அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது தான், பெரும்பாலான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, அவர் நேற்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் நரேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.
The post பெரியார் பல்கலை துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.