கல்வராயன்மலை, ஜூலை 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டம் வெள்ளிமலை அருகே பெரியார் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கல்வராயன்மலைக்கு வருகை புரிந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் சிறுகளூர், கவியம், மேகம், தேம்பாவணி, முட்டல் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அரூர், திருவண்ணாமலை, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
The post பெரியார் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.