திருத்துறைப்பூண்டி, ஜன. 11: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திக வினர் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்துள்ளனர். தந்தை பெரியாரை இழிவுபடுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் யுவராஜியிடம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரத் தலைவர் சித்தார்த்தன், நகரச் செயலாளர் நாகராஜன் துணைச் செயலாளர் சம்பத்குமார், ஒன்றிய தலைவர் பொன்முடி, ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உமாநாத் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
The post பெரியார் குறித்து அவதூறு: சீமான் மீது திக புகார் மனு appeared first on Dinakaran.