ஓசூர்: பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஒசூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு. அடுத்தாண்டு நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை பெரியார் குறித்து விமர்சிப்பதற்கே பெரியார்தான் காரணம். எங்களை போல் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்னேறவும், இன்று பேசவும் பெரியாரே காரணம். ஒரு சமூகத்தினரிடம் இருந்த அதிகாரம், மூடநம்பிக்கையை மக்களிடம் பேசி பெரியார் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் பெரியார் என்றும் அவர் தெரிவித்தார்.
The post பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை: கே.பி.முனுசாமி கண்டனம் appeared first on Dinakaran.