பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பு

3 months ago 22

பெரம்பலூர், செப்.29: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தாமோ. அன்பரசன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததின்படி, அஹமதாபாத்தில் உள்ள இந்தியத் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் \”தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்\” (Entrepreneruship and Innovation) என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. தொழில் முனைவோராக ஆக விரும்பும் நபர்களுக்கு இந்த படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ஓராண்டுக்கான சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள் வருகிற அக்- 14 ஆம்தேதி அன்று முதல் தொடங்க உள்ளதால், விண்ணப்பங்கள் தற்போது முதல் பெறப் படுகிறது. விண்ணப்பித்த நபர்களுக்கு செப்டம்பர் கடைசி வாரத்தில் நேர் காணல் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. [email protected] < mailto:[email protected] > என்ற இணையதளத்தில் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். இந்த வகுப்பில் சேருவதற்கான கட்டணம் ரூ 80,000 ஆகும். இதில் சேர விரும்புவோர் 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும், ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது ஐடிஐ அல்லது 10வது அல்லது +2 மற்றும் தொடர் புடைய இரண்டு வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும். மேலும் விபரங் களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ராம்குமார் என்பவரை 9677898633 என்ற செல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரி வித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article