பெரம்பலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியா விட்டால் இனி கட்டாயம் அபராதம்

2 weeks ago 1

பெரம்பலூர்,ஜன.22: பெரம்பலூர் மாவட்டத்தில் ‘இனி ஹெல்மெட் அணியா விட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்’ என கலெக்டர் கிரேஸ் பச்சாவ், எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் கூட்டாக எச்சரித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில், 36ஆவது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பெரம்பலூர் நகரில் ரோவர் ஆர்ச் பகுதியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் கலந்து கொண்டு, சாலை விதிகளைப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பாராட்டினர். ”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு தமிழ் நாடு அரசு பல்வேறு விழிப் புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

வாகன ஓட்டுநர்கள் தூக்கம் இன்மை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழக அரசு இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் ஹெல் மெட் அணிவதன் முக்கியத் துவம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப் படு கிறது.அதனடிப்படையில், சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை, நகர்ப்புற போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று நடத்தப்பட்ட சாலை போக்குவரத்து விழிப் புணர்வு நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனம் ஓட்டிகளுக்கு, சாலை விதிகளை விளக்கி ஹெல் மெட் அணிவதன் முக்கியத் துவத்தை எடுத்துக்கூறி, அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட்டுகளை மாவட்டக் கலெக்டரும், மாவட்ட எஸ்பியும் வழங்கினர்.

இனிவரும் காலங்களில் மீண்டும் இதுபோன்று ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றால், போக்குவரத்து விதியின்படி அபராதம் விதிக்கப்படும் என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்டக் கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோர் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக் கியராஜ், பெரம்பலூர் தாசில்தார் சரவணன், பெரம்பலூர் டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், நேஷனல் ஹைவே டிராபிக் இன்ஸ்பெக்டர் கிள்ளி வளவன், பெரம்பலூர் டவுன் ட்ராபிக் இன்ஸ் பெக்டர் மகேஷ், டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர்கள், டிராபிக் போலீசார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியா விட்டால் இனி கட்டாயம் அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article