* 9 நாட்களில் 78,267 பேர் பார்வையிட்டனர்
* கலெக்டர் சொந்த நூலகத்திற்கு விருது வழங்கினார்
பெரம்பலூர்,பிப்.12: பெரம்பலூர் மாவட்ட 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை 78,267 நபர்கள் பார்வையிட்டதில், ரூ. 1 கோடியே 9 லட்சத்து48 ஆயிரத்து 496 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியன சார்பில் பெரம்பலூர் நகராட்சித் திடலில் நடத்திய 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் 9ஆம் தேதி நடைபெற்றது. நிறைவு நாள் விழாவினை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள் ஒருங் கிணைத்து வழங்கினர். புத்தக அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, தினந்தோறும் வருகை புரிந்த நபர்களின் எண்ணிக்கை, விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் விவரங்கள் குறித்து புத்தக பதிப்பாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஆலத்தூர் வட்டத்தைச் சேர்ந்த சிறப்பு குழந்தைகள் செய்த கைவினைப் பொருட்களான தென்னை கீற்றுகளால் செய்த அலங்கார தோரண மாலைகள், களி மண்ணினால் செய்த பொருட்கள், மூங்கிலில் செய்த காத்தாடிகளையும், நவீன வண்ண ஓவியங்கள் இடம்பெற்ற அரங்கினை யும் மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டார். 10 நாட்கள் புத்தகத் திருவிழாவினை சிறப்பான ஒருங்கிணை த்து வழங்கிய தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம், பிளஸ் மேக்ஸ் நிறுவனங்கள், ஆதவ் பப்ளிக் பள்ளி, கோல்டன் கேட்ஸ் கல்வி நிறுவனங் கள், ஈடன் கார்டன் கல்வி நிறுவனங்கள், ராம கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனத்தார்களையும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், கலெக்டர் அலுவலக மேலாளர் சிவா, பப்பாசி செயலர் முருகன், மக்கள் பண்பாட்டு மன்ற தலைவர் சரவணன், செயலர் அரவிந்தன் ஆகியோருக்கும் மாவட்ட கலெ க்டர் பொன்னாடை அணிவித்து, புத்தகம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
மேலும், புத்தகத்திருவிழா சிறப்புடன் நடக்க பணி யாற்றிய அரசுத்துறை அலு வலர்கள், தன்னார்வலர் அமைப்பினரையும் மாவட்ட கலெக்டர் கௌரவித்தார். 2024-25 ஆம் ஆண்டுக்கான சொந்த நூலகத்திற்கான விருதினை மருத்துவர் கோபால் என்பவருக்கு மாவட்டக் கலெக்டர் வழங் கினார். புத்தக திருவிழாவி ற்காக நடத்தப்பட்ட வாசக போட்டியில் “யாசித்தேனும் வாசிப்போம்“ என்ற வாச கத்தை எழுதிய மலை யாளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுகுமாருக்கு மாவட்டக் கலெக்டர் ரூ10 ஆயிரத்திற்கான காசோ லையினை வழங்கி பாராட் டினார். பத்து நாட்கள் மிக எழுச்சியோடும், சிறப்போ டும் நடைபெற்ற புத்தகத் திருவிழாவினை 78,267 நபர்கள் பார்வையிட்டுள்ள னர். ரூ1,09,48,496 மதிப் புள்ள புத்தகங்கள் விற்ப னையாகியுள்ளது குறிப்பி டத்தக்கது.
விழாவில் பெரம்பலூர் சப். கலெக்டர் கோகுல், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.(படங்கள் உள்ளது)பட விளக்கங்கள் :பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற பெரம்பலூர் மாவட்ட 9வது புத்தகத் திருவிழாவில் சொந்த நூலகத்திற்கான விருதினை மருத்துவர் கோபாலுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். அருகில் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், சப். கலெக்டர் கோகுல், கலெக்டர் பிஏ வைத்திய நாதன் உள்ளனர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த புத்தகத்திருவிழாவில் ரூ.9.45 கோடிக்கு மக்கள் புத்தகங்கள் வாங்கினர் appeared first on Dinakaran.