பெரம்பலூர்,பிப்.15: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மாணவ மாணவியருக்கு வேலை வாய்ப்புத்துறையின் திருச்சி மண்டல இணை இயக்குனர் அருணகிரி இலவச பாடக் குறிப்புகளை வழங்கினார். பெரம்பலூர் புது பஸ்டாண்டு தென்புறம், மாவட்ட மையன் நூலகம் எதிரே இயங்கி வரும், பெரம்பலூர் மாவட்டவேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயலும் வட்டம் வாயிலாக நடத்தப் படும்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி 4-க்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப் பினை, வேலைவாய்ப்புத் துறையின் திருச்சி மண்டலஇணை இயக்குனர் அருணகிரி என்பவர் நேற்று (14 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை காலையில் நேரில் பார்வையிட்டார். அப்போது அந்த பயிற்சி வகுப்பில் ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான பயிற்சிகள் பெறும் மாணவ மாணவி யரின் எண்ணிக்கை, அந்த பயிற்சிவகுப்புகள் மூலம், அரசின் சார்பாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்,பயிற்சி அளிப்பவர் களின் விவரம் குறித்து விவரமாக கேட்டறிந்தார்.
பின்னர் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் துறையின் சார்பாக இலவச பாடக் குறிப்புகள் வழங்கி வாழ்த் தினார். நிகழ்ச்சியின் போது, பெரம்பலூர் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார் உடனிருந்தார். நிகழ்ச்சியில், 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இலவச பாடக் குறிப்புகளைப் பெற்றனர்.
The post பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை கட்டணமில்லா பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.