பெரம்பலூர்,ஜன.22: பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, 2024-2025 ஆம் ஆண்டிற்கு பள்ளி மாணவ- மாணவிய ருக்கான கவிதை,கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நேற்று 21 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை, பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள மாவட்ட பாரத சாரண,சாரணியர் பயிற்சிமைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை, பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தொடங்கிவைத்தார். போட்டிகளுக்கு அரசு மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரி யர்கள் கவுல்பாளையம் இரமணி, பேரளி நிலவு, பெரம்பலூர் சிலம்பரசன், மேலப்புலியூர் சரவணன், கீழப்புலியூர் சரவணன், அரும்பாவூர் சுதா, சத்திர மனை சங்கீதா, காரை கனி மொழி, வாலிகண்டபுரம் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், பேச்சு போட்டியில் சத்திரமனை அரசு மேல் நிலைப்பள்ளி, 12ஆம் வகுப்பு அ-பிரிவு மாணவி மகேஸ்வரி முதலிடமும், மேலப்புலியூர் அரசு மேல் நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு இ- பிரிவு மாணவி சுப 2ஆம் இடமும், பெரம்பலூர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11 ஆம் வகுப்பு ஆ-பிரிவு மாணவன் சக்தி கணேஷ் 3ஆம் இடமும் பெற்றனர். அதேபோல், கட்டுரைப் போட்டியில் அரும்பாவூர் அரசு மேல் நிலைப்பள்ளி, 12ஆம் வகுப்பு அ-பிரிவு மாணவர் மனோஜ் குமார் முதலிடமும், லெப்பை குடிக்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 12ஆம் வகுப்பு ஆ-பிரிவு மாணவி ஷக்தி 2ஆம் இடமும், பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு, அ- பிரிவு மாணவி ஆஷினி 3ஆம் இடமும் பெற்றனர்.
கவிதைப் போட்டியில், லெப்பைக் குடிகாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஏ-2 பிரிவு மாணவி சத்யா முதலிடமும், கவுல் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு அ-பிரிவு மாணவி கனிஷ்கா 2ஆம் இடமும், பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி, 11ஆம்வகுப்பு அ-பிரிவு மாணவி நர்மதா 3ஆம் இடமும் பெற்றனர். போட்டிகளில் முதவிடம் பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், 3ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ,5 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
The post பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் appeared first on Dinakaran.