பெரம்பலூர் பெருமாள் கோயிலில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

2 weeks ago 1

பெரம்பலூர், ஜன. 24: பெரம்பலூர் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி தெப்பக்குளம் அருகேயுள்ள மரகத வல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில் நேற்று (23ஆம்தேதி) 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் (கும்பாபிஷேகம் நடை பெற்ற நாள்) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி, காலை 10:30 மணி அளவில் பெருமாள் தேவி சமேத பூதேவி மூலவர் மற்றும் உற்சவர் தாயார், மூலவர் உற்சவர் ராஜகோபுரம் முன் எழுந்தது அருள் பாலித்து வரும் கம்பத்து ஆஞ்ச நேயர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் வெகு விமரி சையாக நடைபெற்றது.

பின்னர் பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை பட்டாபி பட்டாச் சாரியார் செய்துவைத்தார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோயிந்தராஜன், பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ் வரன், குமார், செந்தில், முருகேசன் மற்றும் பெரம்பலூர், துறை மங்கலம், அரணாரை, விளாமுத்தூர், எளம்பலூர், நெடுவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வணங்கி பெருமாள் அருள் பெற்றுச் சென்றனர்.

The post பெரம்பலூர் பெருமாள் கோயிலில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article