பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் அருகே $21 லட்சத்தில் கட்டப்பட்ட இ-சேவை மையம்

3 months ago 12

பெரம்பலூர், பிப்.10: பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் அருகே ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள அரசு இ-சேவை மையம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர், முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி ஆகியோர் திறந்து வைத்து, இணைய வழிச் சான்று களைப் பயனாளிகளுக்கு வழங்கினர். பெரம்பலூர் நகரில் மதரஸா சாலையிலுள்ள பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் அருகே, பெரம்பலூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு இ-சேவை மைய கட்டிட திறப்புவிழா நேற்று (9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி பாராளுமன்றத் தொகுதி எம்பியுமான ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக் கேற்றி திறந்து வைத்தனர். பின்னர் அரசு இ-சேவை மைய செயல்பாட்டினை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் துறை அமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டு, இணைய வழிச் சான்றினை பயனாளிகளுக்கு வழங்கினர்.

அரசின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக அரசு இ -சேவை மையங்களை நடத்திவருகிறது. இந்தச் சேவையினை பொது மக்களுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 234 சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இ-சேவைமையங்கள் அமைத் திடவும், அந்த மையங்களுக்கான நவீன மேசை, கணினிகள் வழங்கி தொடங்கி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அருகே ரூ.21 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு இ-சேவை மைய கட்டிடத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சரும் நேற்று திறந்து வைத்து, அரசு இ சேவை மையத்தின் மூலமாக இலவசமாக இணைய வழி சான்றினை பயனாளிக்கு வழங்கினார்.

இந்த இ-சேவை மையத்தில் சிறு குறு விவசாயி சான்றிதழ், ஓய்வூதிய திட்டம், விதவை சான்று, சாதிசான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வருவாய்த் துறையின் சான்றிதழ்கள், சமூக நலத் துறையின் திருமண நிதியுதவிதிட்டம், இணைய வழி பட்டா மாறுதல், முதல்தலைமுறை பட்ட தாரிக்கான சான்றிதழ்கள், கலப்புத்திருமண சான்றிதழ்கள், சொத்து மதிப்பு சான்றிதழ்கள், இரண்டுபெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இணைய வழி சான்றுகளை இலவசமாக பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், முன்னால் எம்எல்ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசி யேஷன் தலைவர் பரமேஷ் குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் தழுதாழை பாஸ்கர், மகா தேவி ஜெயபால், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, பெரம்பலூர் தாசில்தார் சரவணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் அருகே $21 லட்சத்தில் கட்டப்பட்ட இ-சேவை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article