பெரம்பலூர்,அக்.21: பெருநிலா கிராமத்தில் 3மாடுகள் மர்மமான முறையில் இறப்பு. விவசாயி குடும்பத்தார் வேதனை. 5பேர் கொண்ட கால்நடை மருத்துவர்கள் குழு விரைந்து சென்று உணவு மாதிரிகளை சேகரித்து திருச்சி தடயவியல்துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, கை.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருநிலா கிராமத்தைச் சேர்ந்தவர் அக்கமுத்து மகன் சந்திர சேகர் (32). பெருநிலா கிராமத்தில் காலனி பகுதிக்கு அருகே 500 மீட்டர் தொலைவில் வயல் பகுதியில் இவரது வீடு உள்ளது.
சந்திரசேகர் தனது வீட்டில் 5 மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகளுக்கான தொட்டியில் உணவருந்திய அரை மணி நேரத்தில் இவரது 3 மாடுகள் நேற்றுக் காலைமர்மமானமுறையில் இருந்துள்ளது. குறிப்பாக இறந்து கிடந்த மாட்டின் வாயிலிருந்து 2 லிட்டர் அளவிற்கு இரத்தம் வெளி யேறி சுற்றிலும் பரவிக் கிடந்தது. மற்றொரு மாட்டின் பின்புறம் (செரிக்காமல் வெளியேறும் கழிச்சல் போல) திரவ நிலையில் சாணம் கொட்டிக் கிடந்தது. ஒரே சமயத்தில் 3 பசு மாடு கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், சந்திர சேகர் குடும்பத்தார் கடும் அதிர்ச்சியிலும், வேதனை யிலும் மூழ்கியுள்ளனர்.
இது தொடர்பாக சந்திர சேகர் கொடுத்த தகவலின் பேரில், கை.களத்தூர் கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சிவா தலைமையில், அரும்பாவூர் கால்நடை உதவி மருத்துவர் விக்னேஷ், வாலிகண்டபுரம் கால்நடை உதவி மருத்துவர் சஞ்சீவி, வி.களத்தூர் கால்நடை உதவி மருத்துவர் அரவிந்த், பெரம்பலூர் மாவட்ட கால் நடைத் துறையின் நோய் புலனாய்வுப் பிரிவு உதவி மருத்துவர் தீபா ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் உள்ள சந்திர சேகர் வீட்டிற்குச் சென்று இறந்துகிடந்த மாடுகள் குறித்து ,விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மாடுகளின் உணவு மாதிரி, ரத்தம் மாதிரி ஆகிய வற்றைச் சேகரித்து திருச்சியில் உள்ள தடயவியல் துறை(Forensic Laboratory) ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக கை.களத்தூர் கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சிவா தெரிவிக்கையில், விவசாயி சந்திரசேகர் மாடுகளுக்காக திரவ உணவு வைத்துள்ள தொட்டியில் பருகிய 3 கறவை மாடுகள் மட்டுமே அரை மணி நேரத்தில் இறந்துள்ளன. அதில் உணவு பருகாத மற்ற 2 மாடுகள் பத்திரமாக உள்ளன. தொட்டியில் மாடுகள் சாப்பிட்ட திரவ உணவில் ஏதேனும் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகித்து தொட்டியில் இருந்தும், இறந்த மாடுகளின் கழிவு மற்றும் ரத்தத்தில் இருந்தும் மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க, திருச்சி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் 3 மாடுகளின் இறப்புக்குக்கான காரணம் முழுமையாக தெரியவரும் எனத் தெரிவித்தார். இறந்து போன 3 மாடுக ளும் கறவை மாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பெரம்பலூர் அருகே 3 மாடுகள் மர்மச்சாவு appeared first on Dinakaran.