பெரம்பலூரில் ரத்ததான முகாம்

1 day ago 2

பெரம்பலூர்,ஜன. 30: பெரம்பலூரில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பெரம்பலூர் மாவட்டக் கிளையின் சார்பாக ரத்ததான முகாம் பெரம்பலூர் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் நடைபெற்றது.
முகாமிற்கு அமைப்பின் மேலாண் தலைவர் டாக்டர் தங்கராஜ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் சப்.கலெக்டர் கோகுல் முகாமினை துவக்கிவைத்தார். முன்னாள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பின் தலைவரும், ரோவர் கல்விக் குழுமத்தின் தலைவருமாகிய வரதராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். முகாமில், 52 கொடையாளர்கள் குருதி தானம் வழங்கினர். கொடையளித்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்பது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மாரிமுத்து, ரோவர்கல்விக் குழுமத்தின் மேலாண் துணைத் தலை வர் ஜெயராமன், முதல்வர் சிவக்குமார், மாவட்டரத்த வங்கி மருத்துவர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் மருத்துவர் கோசிபா, ராஜேந்திரன், ராஜா, கார்த்திகேயன், ஆகி யோர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், தேவகி, வில்லவனம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரவீன் பெருமாள், ஜீவானந்தம், சிவப்பு நாடா அமைப்பின் அமைப்பாளர் முனைவர் சுப்ரமணியன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அமைப்பின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கௌரவ பொருளாளர் ஜோதிவேல் நன்றி கூறினார்.

The post பெரம்பலூரில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article