பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 weeks ago 1

பெரம்பலூர்,ஜன.22: பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் சார்பில் 70 வயதுக்கு மேல் உள்ளவர் களுக்கு கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள பெரம்பலூர் தாலுக்கா அலுவலகம் முன்பு நேற்று 21 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை, தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கமிட்டேஷன் காலத்தை 12 வருடமாக குறைத்திட வேண்டும்.

ஊதியக்குழு நிலுவை மற்றும் அகவிலைப்படி நிலுவையை உடனடியாக ரொக்கமாக வழங்கிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக மருத்துவப்படி ரூஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக ரூ2.50 லட்சம் வழங்கிடவேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும். கிராம உதவியாளர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியமாக ரூ9000 நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரசு சித்த மருத்துவர் கோசிபா, முன்னாள் பேரூ ராட்சி செயல் அலுவலர் தமிழரசன், ஓய்வுபெற்ற ஆசிரியர் பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடித்து தங்களது கோரிக்கை மனுவினை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பவேண்டி பெரம்ப லூர் மாவட்டக் கலெக்டரி டம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச்சென்றனர்.

The post பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article