பெரம்பலூர்,பிப்.12: மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை உயர்த்துவதில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வந்ததாகும் என பெரம்பலூரில் நடந்த விழாவில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார். பெரம்பலூரில் நடந்த தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, சங்கத்தின் மண்டல செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முருகேசன் வரவேற்றார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஆலோசகர்கள் மித்ரா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம், பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கல்பனாத்ராய், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) லதா, (இடை நிலைக்கல்வி) செல்வக் குமார், (தொடக்கக் கல்வி) அய்யாசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் அரசகுமார் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்திப் பேசினார்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் புதிய நிர்வாகிகளை, சிறந்த பள்ளிகளை வாழ்த்தி பேசினார். விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது: கல்விதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். எனது தந்தையைப் போல் நானும் அரசியலுக்கு வந்தபிறகு கல்விக்கு முன்னுரிமை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். நான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 2016-2011 ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வி துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, பெரம்பலூர் வந்து ஆய்வு கூட்டம் நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தார். அதே போல் பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது.
அதன் தொடர்விளைவு, அப்போதைய மாவட்டக் கலெக்டர் தரேஸ் அகமது எடுத்த முயற்சியின் காரணமாக இன்றைக்கு பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்கள்அரசு பொதுத் தேர்வு முடிவுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை உயர்த்துவதில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வந்ததாகும். தனியார் பள்ளிகளின் பேருந்து பிரச்சனைகள் குறித்து விரைந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஷமீம்ஷா, மதன்குமார், கேசவ்பாலாஜி, தங்கவேல், நிருபா, சுவாதிகா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்டச் செயலா ளர் ராம்குமார் நன்றி கூறினார்
The post பெரம்பலூரில் சிறந்த பள்ளிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் விருது வழங்கினார் appeared first on Dinakaran.