பெரம்பலூரில் 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

2 months ago 8

 

பெரம்பலூர்,பிப்.25: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ம்தேதி நடைபெறும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், பெரம்பலூர் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ஆம்தேதி காலை 10.30 மணியளவில் நடை பெறவுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் வௌியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்த முறையீடுகள் விவாதிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

The post பெரம்பலூரில் 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article