பெரம்பலூரில் 152 வருவாய் கிராமங்களில் நில உடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்: வேளாண் இணை இயக்குனர் தகவல்

3 months ago 14

பெரம்பலூர், பிப்.10: விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரி பார்த்தல் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் 152 வருவாய் கிராமங்களில் நடக்கிறது என்று பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். விவசாயத்தை பிரதானமாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் ஒன்றிய அரசு வேளாண் அடுக்குத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம், நில உடமை வாரியாக புவியிடக் குறியீடு செய்த பதிவு விவரம், நில உடமை வாரியாக பயிர் செய்த விவரம், ஆகிய மூன்று விவரங்களும் முக்கியமானவை ஆகும்.

இதில் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் திட்டமானது, ஒன்றிய வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின் படி, மாநில முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மின்னணு முறையில் அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசுத் திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத் தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்துத் துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது, ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அரசுத் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப் படுத்த முடியும்.

விவசாயிகள் நேரடியாக வலைத் தளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் திட்டங்கள் பெற்றுக் கொள்ள முடியும். பிரதமரின் கௌரவ நிதித் திட்டம் மற்றும் பயிர்க் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்கள் அனைத்தும் இந்தத் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாபு கூறியதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பிரதமரின் கௌரவ நிதித் திட்டத்தின்கீழ் பதிவு செய்து, பயனடைந்துவரும் விவசாயிகளின் தரவுகள் Farmers Registry திட்டத்தின் மூலம் தரவுகளை சரிபார்த்து, அவர்களுக்கு அடையாள எண் வழங்கப் பட உள்ளது.

இந்தப் பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்ட அளவில் உள்ள 152 வருவாய் கிராமங்கள் அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை,வேளாண் விற்பனை மற்றும் வேளான் வணிகத் துறை அலுவலர்கள், ஆத்மா திட்டப் பணியாளர் கள், பயிர் அறுவடைப் பணியாளர்கள் மற்றும் சமுதாய பண்ணை மகளிர் வருகை தந்து தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற் கொள்கின் றனர். எனவே விவசாயி கள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண் ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து அடையாள எண் பதிவு செய்ய தங்களின் விவரங்களை வழங்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பாபு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் 152 வருவாய் கிராமங்களில் நில உடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்: வேளாண் இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article