பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ஹம்சவர்தன்

4 hours ago 1

சென்னை,

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். இவர் 'புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன், பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி, சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் 'கிழக்கு முகம், பூமணி' உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த 2021-ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாந்தி, மூச்சு திணறல் பிரச்சினையால் உயிரிழந்தார்.

இதையடுத்து கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷா என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ஹம்சவர்தன் திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் நடிகர் ஹம்சவர்தன் தனது பெயரை "லியோ ஹம்சவர்தன்" என மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது நடிகர் லியோ ஹம்சவர்தன் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article