பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம் வேலூர் இஎஸ்ஐ மருத்துவர்கள் சாதனை

2 days ago 3

வேலூர், ஏப்.17: வேலூர் தொரப்பாடியை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றி இஎஸ்ஐ மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். வேலூர் ெதாரப்பாடியைச் சேர்ந்தவர் 45 வயதுடைய பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒராண்டுக்கு மேலாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக வேலூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மகப்பேறு மருத்துவர் மாதுரி, அறுவை சிகிச்சை நிபுணர் சந்தானகோபால், மயக்கவியல் மருத்துவர் அம்ருத் மற்றும் செவிலியர் சித்ரா உள்ளிட்டோர் இணைந்து, நேற்று பெண்ணின் வயிற்றில் இருந்த 20 செ.மீ நீளமும் 2 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர். தற்போது, அந்த பெண் நலமுடன் உள்ளார். பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவ குழுவினரை இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெயகீதா பாராட்டினார்.

The post பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம் வேலூர் இஎஸ்ஐ மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article