சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண், எழும்பூர் பாத்தியன் சாலையில் உள்ள ஒரு துணிக்கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடை ஊழியர் ஒருவர், இளம்பெண் கேட்ட துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து காட்டிக்கொண்டிருந்தார். பிறகு அந்த ஊழியர் துணி எடுக்க வந்த பெண்ணிடம் தவறான நோக்கத்தில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் அலறி சத்தம் போட்டார்.
பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது துணி எடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக கடை ஊழியர் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் கடையில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அசோக் தாக்கூர் (34) மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
The post பெண்ணிடம் அத்துமீறல்: வடமாநில ஊழியர் கைது appeared first on Dinakaran.