
புவனேஷ்வர்,
6-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேஷ்வரில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதியது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்தியா அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.