பெண்கள் பருவம் அடையும் மாதங்களும், ருது ஜாதக பலன்களும்

9 hours ago 1

ஒரு பெண் பருவம் அடையும் நாள் மற்றும் நேரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் ஜாதகம் 'ருது ஜாதகம்' எனப்படுகிறது. அந்த ஜாதகத்தில் உள்ள கிரக நிலைப்படி வாழ்வின் பலன்களை அறிந்துகொள்ள முடியும். ருதுவாகும் நாட்கள், திதிகள், நட்சத்திரங்கள் இவற்றின் அடிப்படையில், அந்த பெண்களுக்கான அடிப்படை பலன்களை கணிக்கலாம். இதே போல் பன்னிரெண்டு தமிழ் மாதங்களில் பருவம் அடைவதற்கும் அந்தந்த மாதங்களுக்குரிய பொதுவான பலன்கள் ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அதன் விவரம்:

சித்திரை: உடம்பில் அதிக சூடு இருக்கும், தன்னம்பிக்கை அதிமாக இருக்கும். நல்ல கணவர் அமைவார்.

வைகாசி: மகிழ்ச்சியும், சுகமும் கொண்ட பெண்ணாக இருப்பாள், நல்ல புத்திர பாக்கியம் உண்டு.

ஆனி: மனமும், உடம்பும் ஒருங்கிணைப்போடு இருக்கும். நல்ல புத்திர பாக்கியத்தோடு திகழ்வாள்.

ஆடி: அழகும், கவர்ச்சியும் இருக்கும். ஆடவர்கள் மனதை கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். நல்ல சுகபோகம் உண்டு.

ஆவணி: அழகான குழந்தைகளைப் பெற்று மகிழ்வாள். தெய்வ பக்தி உள்ளத்தில் இருக்கும்.

புரட்டாசி: கர்ப்பப்பை பலம் கொண்டதாக இருக்கும். நல்ல புத்தியும், அறிவும் உடையவள்.

ஐப்பசி: குளிர்ந்த உடலை கொண்டவள். கணவர் மீது அன்பும், அனுசரணையும் கொண்டவராக இருப்பார். சாதுர்யமானவராக இருப்பார்.

கார்த்திகை: முன் கோபம் இருந்தாலும் நல்ல மனம் உண்டு. முருகனின் அருள் பெற்றவராக இருப்பாள்.

மார்கழி: கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் கிடைக்கும். நல்ல குழந்தைகளைப் பெறுவாள்.

தை: தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பாள். பெற்றோர்கள் மீது பாசம், அன்பு கொண்டவள். புண்ணியம் செய்தவள் ஆவாள்.

மாசி: சுக போகத்துடன் வாழக்கூடியவள். நல்ல கணவன், குழந்தைகள் உண்டு. செல்வ வளம் பெற்று வாழ்வாள்.

பங்குனி: கண்ணியமும், தெய்வ பக்தியும் கொண்டவள். மற்றவர்களை மதிக்க கூடியவள். நல்ல புத்திர பாக்கியம் உண்டு என ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

Read Entire Article