பெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

3 months ago 22

துபாய்,

9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது.தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.

தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது . அந்த அணியில் நிடா தர் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய அருந்தாதி ரெட்டி 3 விக்கெட் , ஷ்ரேயன்கா பட்டில் 2 விக்கெட் வீழ்த்தினார் தொடர்ந்து 106 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது

இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சபாலி வர்மா 32 ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா சனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Read Entire Article