பெண்கள் டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

3 months ago 23

துபாய்,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும், இங்கிலாந்தும் மல்லுக்கட்டின. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை ருசித்தது. 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீசும், தென்ஆப்பிரிக்காவும் முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. இங்கிலாந்து வெளியேறியது.

அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

 

Read Entire Article