பெண்கள் டி20 உலகக் கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து

1 month ago 14

ஷார்ஜா,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. முன்னதாக இன்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தியது.

இதனை தொடர்ந்து நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேனியல் வாட் மட்டும் சிறப்பாக விளையாடி 41ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர். சோபனா மோஸ்ட்ரே மட்டும் 44 ரன்கள் எடுத்தார். இறுதியில், வங்கதேசம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  

Read Entire Article