பெண்கள் டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

3 hours ago 3

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் சிறப்பாக ஆடினர். இறுதியில், இங்கிலாந்து அணி 19.2ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 

Read Entire Article