பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆட்டோ, வாடகை கார்களுக்கு பிரத்யேக க்யூஆர் குறியீடு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

1 week ago 3

சென்னை: சென்னையில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்ட பிரத்யேக காவல் உதவி ‘க்யூ ஆர்’ குறியீட்டை ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகருக்குள் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு க்யூ ஆர் குறியீடு அடிப்படையிலான அவசரகால சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article