சென்னை: கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை மதுரை, பழனி, பொள்ளாச்சி, மங்களூர், கோவா வழியாக ரயில் இயக்கப்படுமா? என பொதுமக்கள் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களையும், மேற்கு கடற்கரையின் முக்கிய பகுதிகளையும் இணைக்கும் வகையில், கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு மதுரை, பழனி, பொள்ளாச்சி, மங்களூர் மற்றும் கோவா வழியாக புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மங்களூர் மற்றும் கோவா போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு, தற்போது நேரடி ரயில் சேவைகள் மிகவும் குறைவு. இதனால், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பயணிக்கும் மக்கள் இந்த புதிய ரயில் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில், பயணிகள் மற்றும் உள்ளூர் வணிக அமைப்புகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இது குறித்து ரயில்வே நிர்வாகம் விரைவில் எடுக்குமா ? என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
The post கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை மதுரை, பழனி, பொள்ளாச்சி, மங்களூர், கோவா வழியாக ரயில் இயக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.