பெண்கள் கிரிக்கெட்; தொடரை வெல்லுமா இந்தியா..? - கடைசி போட்டியில் நியூசிலாந்துடன் இன்று மோதல்

2 months ago 14

அகமதாபாத்,

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article