பெண்களை போல பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம்: காங்கிரஸ் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்

1 week ago 2

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவாடானை இராம. கருமாணிக்கம் (காங்கிரஸ்) பேசுகையில், ‘ஆண்களுக்கும் பேருந்துகளில் விடியல் பயணம் கொடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘‘ஆண்களின் இலவசப் பயணத்தைப் பொறுத்தவரையில், உறுப்பினரது ஆர்வம், வரவேற்கத்தக்கது. இருந்தாலும், இதுவரையில், ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்ற பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் தரவேண்டும் என்கிற வகையில் தான், முதல்வர் பெண்களுக்கு விடியல் பயணம், கலைஞர் உரிமை தொகை வழங்கும் திட்டங்களை தந்து, பெண்கள் வாழ்வில் சமநிலையில் வருவதற்கு தந்தை பெரியார் காட்டிய பாதையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் அரசினுடைய நிதிநிலை சீராகும்பட்சத்தில் இவையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்’’ என்றார்.

The post பெண்களை போல பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம்: காங்கிரஸ் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article