பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 day ago 4

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள்சட்ட உதவிகள்பாதுகாப்பு அம்சங்கள்சமுதாயத்தில் பெண்களின் பங்குதனித்திறன்சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள்ஊடகங்கள்சமூக வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் வன்முறையைக் குறைக்கவும்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாகமத்திய குற்றப்பிரிவுகூடுதல் ஆணையர் ராதிகா அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனிதாவின் வழிகாட்டுதலின் பேரில் நேற்று முன் தினம் சென்னைதேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஜே.பி.ஏ.எஸ் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்தும் அவற்றை முன்கூட்டியே அறிந்து தடுப்பது பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை காவல்வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ரித்து சிறப்பு விருந்தினராகவும்குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டுபாலியல் தொல்லைவேலை செய்யும் இடத்தில் பெண்கள் நடந்துகொள்ளும் விதம்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தும்அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும்பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்தும் விளக்கினர்.

மேலும்கல்லூரி மாணவிகள் அவசர உதவிக்கு காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதுபெண்களுக்கான உதவி எண்.1091குழந்தைகளுக்கான உதவி எண்.1098 ஆகிய அவசர அழைப்புகளை பயன்படுத்தி பயனடைவது குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article