பெண்களுக்கான திட்டங்கள்; குறை கூறுவதற்கு பதிலாக கவர்னர் நேரில் வந்து பார்க்க வேண்டும் - மேயர் பிரியா

7 hours ago 1

சென்னை,

கவர்னர் மாளிகையிலேயே இருந்து கொண்டு குறை கூறுவதற்கு பதிலாக பெண்களுக்கான திட்டங்கள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து பார்க்க வேண்டும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை தனியாருக்கு டெண்டர் வழங்குவது தொடர்பான முடிவு பரிசீலனையில் இருக்கிறது. இதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார்.

கவர்னர் ஆர்.என்.ரவி, தனது கவர்னர் மாளிகையிலேயே இருந்து கொண்டு குறை கூறுவதற்கு பதிலாக பெண்களுக்கு இந்த ஆட்சியில் எந்த அளவு முக்கியத்துவம் உள்ளது, பெண்களுக்கான திட்டங்களை எந்த அளவிற்கு இந்த ஆட்சி செயல்படுத்தி வருகிறது, எத்தனை பெண்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள் என்று நேரில் வந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்தார். 

Read Entire Article