தைராய்டு பிரச்னையால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்து அறிந்து கொள்வோம். பொதுவாகவே நமக்கே தெரியாமல் உடல் எடை கூடுகிறது, அல்லது குறைகிறது எனில் தைராய்டுக்கான சோதனைகள் செய்துகொள்வது நல்லது. ஒருவேளை தைராய்டு இருப்பது உறுதியானால் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமாகவே சரி செய்யலாம். அவைகள் இதோ
சோயா உணவுகள்
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சோயா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் சில சேர்மங்கள் உண்பவர்களுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாகவே இருப்பதால் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் இவை உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்
இறைச்சி, வறுத்த உணவுகள், மயோனைஸ் வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் இவற்றில் இருக்கும் கொழுப்பு, உடலின் திறனை சீர்குலைத்து தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உறிஞ்சுவதை தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தானிய வகைகள்
பார்லி, கம்பு போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இவற்றில் குளுட்டன் சத்து அதிகம் இருக்கும். இது தைராய்டு ஹார்மோன் மற்றும் மருந்துகளை உறிஞ்சுவதை தடுக்கும்.
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள்
அதிக நார்ச் சத்துள்ள உணவுகள் தைராய்டு பிரச்னை உள்ளோருக்கு நல்லது என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சிக்கலுக்கு வழிவகுக்கும். முழு தானியங்கள், பீன்ஸ் வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் இருக்கும் நார்ச் சத்து தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உறிஞ்சுவதில் குறுக்கிடும். எனவே தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதிக நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
காய்கறிகள்
முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகளை தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.
– அ.ப.ஜெயபால்
The post பெண்களில் அதிகரிக்கும் தைராய்டு பிரச்னை தவிர்ப்பது எப்படி? appeared first on Dinakaran.