பெண்களின் சம உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் - கி.வீரமணி

2 months ago 16

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொதுவாக மதங்களில் பவுத்தம் தவிர மற்ற மதங்கள் பெண்களுக்கு சம உரிமை, சம பங்கு அளிப்பதில்லை. வடக்கே உள்ள மாநிலங்களில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை குறைவு அல்லது இல்லவே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.

ஆனால் சென்னை ஐகோர்ட்டில்தான் அதிக பெண் நீதிபதிகள். காரணம், இது சமூக பாலியல் நீதி உலவும் பெரியார் மண். திராவிட பூமி. திராவிட இயக்க போராட்டங்களினால் ஏற்பட்ட விளைச்சல். மற்ற மாநிலங்களில் மனுநீதி ஆளுகிறது. திராவிடத்திலோ மனித நீதி, மனித சமத்துவம், மனித சுயமரியாதை இயக்கம் பல களங்களை அமைத்து போராடி வென்று வருவதன் வெற்றி உலாவே இதற்கு காரணம்.

பீகாரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி விடைபெற்று சென்றபோது, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்கள் 12 பேர் நீதிபதிகளாக இருப்பது சென்னை ஐகோர்ட்டில்தான் என்று பாராட்டி பேசியதை மறக்க முடியாது. பெண்கள் பெற்றது கையளவுகூட இல்லை. பெறாதது மலையளவு. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்பதைத்தான் புள்ளி விவரங்கள் நமக்கும், நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வெகுவாக உணர்த்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article