*துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
கீழ்பென்னாத்தூர் : கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறை சார்பில், வட்டார அளவிலான கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு, நகர செயலாளர் அன்பு, அட்மா குழு தலைவர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் போது கீழ்பென்னாத்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்துறை சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் வங்கி டெபாசிட் பத்திரங்களையும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
விழாவில் முன்னதாக, கீழ்பென்னாத்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி வரவேற்று பேசினார். விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கியும், வாழ்த்துரை வழங்கி பேசினார்.
இதில் சமூக நல விரிவாக்க அலுவலர் விஜயகுமாரி, ஊர்நல அலுவலர் (மகளிர்) பச்சையம்மாள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, மேற்பார்வையாளர் லட்சுமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி லோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசாமி, பரசுராமன், தேவேந்திரன் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் டெபாசிட் பத்திரம் appeared first on Dinakaran.