பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத்திட்ட முதிர்வுத் தொகை: விண்ணப்பிக்க அழைப்பு

2 days ago 2

 

மதுரை, நவ. 22: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து ஒரு பெண் குழந்தையாக இருந்தால் ரூ.50 ஆயிரமும், இரு பெண் குழந்தைகளாக இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் சேமிப்புப் பத்திரங்களாக வழங்கப்படுகிறது. இத்தொகை அக்குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து, 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் வழங்கப்படுகிறது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் சேமிப்புப் பத்திரத்துடன், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூடுதல் விபரங்கள் பெற கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தை, பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத்திட்ட முதிர்வுத் தொகை: விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article