
சென்னை,
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகார் குறித்து, டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாக கமிட்டி விசாரணை நடத்தி, தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.