பெண் ஒன்றிய கவுன்சிலருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் சென்னையில் நாளை விசாரணை சட்ட விரோத ஒப்பந்த பணிகள் விவகாரம்

4 hours ago 1

குடியாத்தம், பிப். 12: சட்ட விரோத ஒப்பந்த பணிகள் விவகாரத்தில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பெண் கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்வது குறித்து நாளை சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி ஹேமலதா. இவர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர், ஊராட்சி சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய கவுன்சிலர் பதவி ஏற்ற நாளிலிருந்து பல கோடி ரூபாயில் 41 பணிகளை, இவரது நிறுவனத்தின் பெயரில் ஒப்பந்தம் பெற்று செய்துள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில், வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்து பல்வேறு ஆதாரத்துடன், தகுதி நீக்கம் செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதாவுக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் வரும் 13ம் தேதி(நாளை) மாலை 3.30 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆஜராகவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நகல்கள் அரசு கூடுதல் செயலாளர், ஊராட்சித் துறை திட்ட இயக்குனர், உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

The post பெண் ஒன்றிய கவுன்சிலருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் சென்னையில் நாளை விசாரணை சட்ட விரோத ஒப்பந்த பணிகள் விவகாரம் appeared first on Dinakaran.

Read Entire Article