கோவையில் நடைபெறும் தென்னிந்திய குறும்பட திருவிழா

3 hours ago 2

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19-வது தென்னிந்திய குறும்பட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா துறை நடத்தி வருகிறது.

இந்த விழாவில் 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் 'குடும்பஸ்தன்' பட இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, திரைப்படத் தொகுப்பாளர் அணில் கிருஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குறும்படங்களை அனுப்பப்பட்டிருந்தன. அதில் 14 படங்களே தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன. அதிலும் சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர் என பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.ஜே. ஞானவேல் கல்லூரி மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதாவது, 'ஒரு திரைப்படத்தை எடுக்க கேமரா மட்டுமே போதாது படைப்பாக்கத்திற்கும் கதை சொல்லும் திறனுக்கும், ஆழமான அறிவு அவசியம், அதற்காக குறைந்தது 100 புத்தகங்களை படித்திருக்க வேண்டும்' என்று கூறினார்.

Read Entire Article