பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 181 ஆக உயர்வு

5 months ago 21

அபுஜா,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த 15ம் தேதி இரவு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. இதனால், அந்த பெட்ரோலை சேகரிக்க அப்பகுதியிலுள்ள மக்கள் சாலையில் குவிந்தனர்.

மக்கள் பெட்ரோலை சேகரித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 94 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Entire Article