பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கான கொள்ளை லாப வரியை ரத்து செய்தது ஒன்றிய அரசு

2 months ago 9

புதுடெல்லி: கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் (ஏடிஎப்) ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு கொள்ளை லாப வரியை கடந்த 2022 ஜூலை 1ம் தேதி ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில், தற்போது, உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கான வரியை ஒன்றிய அரசு ரத்து செய்து விட்டது. இந்த அறிவிப்பை ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார். ஒன்றிய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி உள்ளிட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களும் இதனால் பலன் அடையும்.

The post பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கான கொள்ளை லாப வரியை ரத்து செய்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article