பெங்களூருவில் மின்சார வயர் அறுந்து விழுந்து பெண் உயிரிழப்பு

8 months ago 54

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தவரகெரே பகுதியில் உள்ள மகாடி சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மீது மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் மஞ்சம்மா(55) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Read Entire Article