பெங்களூரு: இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் தொடர்பாக பெங்களூரில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் இடம் பெறாத பும்ரா, 3வது போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் உடல் தகுதி குறித்து சோதனை செய்வதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்கு பும்ரா அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடர் சோதனைகள் நடத்த வேண்டி இருப்பதால் பும்ரா மேலும் 2 நாட்கள் பெங்களூர் அகடமியில் தங்கியிருப்பார் என்று தேசிய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
The post பெங்களூருவில் பும்ராவுக்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.