சென்னை: புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மினி பஸ் சேவை திட்டம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக விளங்குகிறது என்று கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை கேட்டால் தெரியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் முதல் தினசரி வேலைக்கு செல்வோர் வரை பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.
இந்த சூழலில் தான் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முக்கியமான ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். இதில் விரைவில் புதுப்பிக்கப்பட்ட மினி பஸ் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்து இருந்தார். இதில் மினி பஸ்கள் புதிதாக மாற்றப்படாது. திட்டம் தான் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்றார். போதிய சாலை வசதி இல்லாத இடங்கள், மிகவும் குறுகலான பாதை கொண்ட இடங்கள், 100க்கும் குறைவான வீடுகள் மட்டுமே கொண்ட பகுதிகள், சிறிய மற்றும் குக்கிராம பகுதிகள் உள்ளிட்டவற்றுக்கும் இனிமேல் மினி பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக 1,842 மினி பேருந்துகளின் சேவைக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.