
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்து விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த முறை தொடக்கத்திலேயே மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்தநிலையில், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாகவும் 5க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் பலத்த மழை பெய்து வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.