பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை வழிமறித்து போதை வாலிபர் ரகளை

2 hours ago 1

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று மாலை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து, சாலையில் அமர்ந்து ஒரு போதை வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று மாலை வேகமாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து, திடீரென சாலையில் அமர்ந்தபடி ஒரு போதை வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் விரைந்து வந்தார். அங்கு மதுபோதையில் மறியலில் ஈடுபட்ட போதை வாலிபரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், தன்னை போக்குவரத்து காவலர் தெய்வசிகாமணி தாக்கியதாகவும், அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போதை வாலிபர் போக்குவரத்து காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறுகிறேன் என்று போக்குவரத்து காவலர் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து சீரானது. இதனால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் வாகன நெரிசலால் பரபரப்பு நிலவியது.

The post பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை வழிமறித்து போதை வாலிபர் ரகளை appeared first on Dinakaran.

Read Entire Article